பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரியான கணவர்.! முதல் நாளே நடிகை சுஜா வருணி போட்ட பதிவு.!
"எல்லாமே அவர்தான்., ரொம்ப மிஸ் பண்றேன்".. விஜே அஞ்சனா வெளியிட்ட உருக்கமான பதிவு..!
பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றியவர் விஜே அஞ்சனா. இவர் தனது திறமையின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். விருது வழங்கும் விழா மற்றும் ஆடியோ ரிலீஸ் விழாக்களில் தொகுத்து வழங்கிய விஜே அஞ்சனா கடந்த 2016 ஆம் ஆண்டு கயல் பட ஹீரோவான சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ருத்ராஷ் என்ற மகன் இருக்கும் நிலையில், அண்மையில் அஞ்சனாவின் கணவருடைய தந்தை சுப்பிரமணியன் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் அஞ்சனா கதறியழுத வீடியோ பார்ப்போரை கண்கலங்க வைக்கும் அளவிற்கு இருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மாமனார் குறித்து உருக்கமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், "நான் பத்து வயதிலேயே எனது தந்தையை இழந்து விட்டேன். எனது தந்தையின் இடத்தை மாமனார் தான் பூர்த்தி செய்தார். தற்போது அவரையும் இழந்துவிட்டேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அதனை தாண்டி அழகான தந்தை-மகளுக்கான பந்தமும் இருந்தது. இதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
எங்களுக்கு மட்டுமே அது புரியும். தற்போது அவரை இழந்து நான் மிகவும் தவித்துக் கொண்டிருக்கிறேன். எனது இதயத்தின் ஒரு பகுதி எப்பொழுதும் அவரை மிஸ் செய்து கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.