96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என்னது நயன்தாரா குரல் இவருடையதா.! டப்பிங் கொடுப்பது இந்த சீரியல் நடிகைதானா?
பொதுவாக படத்திற்கான ஷூட்டிங் முடிந்தபிறகே படத்தில் பேசப்படும் வசனங்களுக்கான டப்பிங் பேசப்படுகிறது. பெரும்பாலும் நடிகர்கள் அனைவரும் தங்களது சொந்த குரலிலே டப்பிங் பேசுவார்கள். நடிகைகளில் ஒருசிலர் மட்டுமே தங்களது சொந்த குரலில் பேசுவார்கள். ஆனால் பெரும்பாலான நடிகைகளுக்கு வேறு யாரவது ஒருவர்தான் டப்பிங் பேசுவார்கள். அதற்கு காரணம் நடிகைகள் பலரும் வெளி மாநிலங்களை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களது வார்த்தை உச்சரிப்பு சரியாக அமைவது இல்லை.
அவ்வாறு டப்பிங் பேசும்போது டப்பிங் பேசுபவர்களின் குரல் நடிகைகளின் குரலுக்கு ஒத்துப்போக வேண்டும். அப்போதுதான் பேசப்படும் வசனங்களில் உயிர் இருக்கும். பிரபல நடிகையான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு டப்பிங் பேசுவது யார் என்ற செய்தி வெளிவந்துள்ளது. அது வேறு யாரும் இல்லை. பிரபல சீரியல் நடிகையான தீபா வெங்கட்தானாம்.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கு அதிகப்படியான படங்களில் டப்பிங் செய்துள்ளார் தீபா வெங்கட். இயக்குனர் அட்லீ இயக்கிய ராஜா ராணி படத்தில் நயன்தாராவிற்க்கு முதன் முதலில் டப்பிங் கொடுத்துள்ளார் தீபா. மேலும் இவரின் டப்பிங் நயன்தாராவிற்கு பிடித்து போக இவருக்கு தனி ஒருவன் படத்திற்கும் டப் செய்ய அழைப்பு வந்ததாக தெரிவித்திருந்தார்.மேலும் இதுவரை நயன்தாரா நடித்த பெரும்பாளான படங்களில் இவர் தான் நயன்தாராவின் குரலுக்கு சொந்தக்காரியாக இருந்துள்ளார்.