கோலிவுட் சூப்பர்ஸ்டாருடன் இணையும் பாலிவுட் சூப்பர்ஸ்டார்.? எந்த படத்தில் தெரியுமா.!
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. இந்த திரைப்படம் வசூலில் 600 கோடியை எட்டி வெற்றி பெற்றுள்ளது.
சூப்பர் ஸ்டாருக்கு சரியான கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. எனவே சூப்பர்ஸ்டார் படுகுஷியாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் எப்படியோ ஹிந்தியில் ஷாருக்கான் அவர்கள். ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஜவான்'.
அந்த திரைப்படம் 900 கோடியை வசூலில் நெருங்கியது. இதனையடுத்து தர்போது சமூக வலைத்தளங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மற்றும் ஷாருக்காணும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஆனால் இப்புகைப்படம் சமீபத்தில் எடுத்ததா இல்லை பழைய புகைப்படமா என்ற கேள்வி எழுந்துள்ளது .!அப்புகைப்படத்தில் ரஜினிகாந்த்தும் ஷாருக்கானும் மிக எளிமையாக பேசிக் கொண்டிருக்கின்றனர். இருவரும் வழக்கமாக நிகழ்ச்சிகளில் சந்தித்தால் அன்பை பரிமாறிக் கொள்வர். இப்புகைபடத்தை பார்த்த ரசிகர்கள் இருவரும் இணைந்து நடிக்குமாறு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.