குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
ஒரே சீரியலால் பின்னுக்கு சென்ற சன் டிவி TRP! எந்த சீரியல் தெரியுமா?
தமிழ் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது சன் தொலைக்காட்சி நிறுவனம். சன் டீவியின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அதில் ஒளிபரப்பாகும் தொடர்கள்தான். முன்பெல்லாம் இல்லத்தரசிகள் மட்டுமே பார்த்து வந்த TV சீரியல்கள் தற்போது சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.
TRP யை ஏற்றுவதற்காக அணைத்து டிவி சேனல்களும் புது புது தொடர்களை அறிமுகம் செய்து வருகின்றன. அந்தவகையில் இதுவரை அனைத்திலும் முதல் இடத்தில் இருந்த சன் டிவி TRP யை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் இந்த சாதனையை படைத்துள்ளது. செம்பருத்தி சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஜீ தமிழின் செம்பருத்தி சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது, சன் சேனலின் நாயகி சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
ஏற்கனவே வெளியான பட்டியலில் ஜீ தமிழ் தொலைக்காட்சி முதல் இடத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது வெளியான கடந்த மாதத்திற்கான ரிபோர்டிலும் ஜீ தமிழ் முதல் இடத்தையும், சன் தொலைக்காட்சி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.