திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மனைவிக்கு தெரிய வந்த கள்ளக்காதல்.! காதலியை கொன்று சடலத்துடன் பயணித்த கள்ளக்காதலன்.!?
கள்ளகாதலால் நடந்த விபரீதம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தவர் அருண் ஸ்டாலின் விஜய், இவரது மனைவி பிரின்ஸி இவர்களுக்கு ஆறு வயதில் மகன் ஒருவர் இருக்கிறார். மேலும் அதே நிறுவனத்தில் ராமநாதபுரம் முதுகுளத்துறை சார்ந்த திவாகர் என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உமா பாரதி என்ற மனைவியும் ஐந்து வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
இது போன்ற நிலையில் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பிரின்சிக்கும், திவாகருக்கும் இடையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் கடந்த உறவு ஏற்பட்டது. எனவே இந்த உறவு திவாகரின் மனைவி உமா பாரதிக்கு தெரிய வரவே திவாகர், பிரின்சியுடனான உறவை முறித்துக் கொண்டதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிரின்சி திவாகருக்கு கொடுத்த நகை மற்றும் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி.. தாய், மனைவி, 3 குழந்தைகள் கொலை.. அரக்கனின் அதிர்ச்சி செயல்.!
இதனால் பிரின்ஸியை கொலை செய்ய முடிவு செய்த திவாகர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திவாகரின் உறவினரான இந்திர குமாரிடம் பல்லாடத்திற்கு கார் எடுத்து வருமாறு கூறியுள்ளார். காரை எடுத்து வந்த இந்திரகுமார் பல்லடத்திற்கு வந்த பின்பு திவாகரன், பிரின்சியிடம் பணம், நகை தருவதாக கூறி அழைத்துள்ளனர். அவர் வந்த பின்பு ஒரு கயிற்றால் பிரின்சியின் கழுத்தை நெறுக்கி கொலை செய்துள்ளனர்.
போலீசார் விசாரணை
பின்னர் பல்லடத்தில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்திற்கு சென்று அங்குள்ள காட்டில் அவரை புதைத்து விடுவதற்காக சென்றிருக்கின்றனர். இவர்கள் ராமநாத புரம் மாவட்டத்திற்கு அருகில் காரை நிறுத்தி இருந்தபோது ரோந்து பணிக்காக சென்ற மதுரை போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்த போது காரில் உள்ளே சடலம் இருப்பது கண்டு பிடித்துள்ளனர். இதன் பின்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "என் மனைவி கர்ப்பமாக இருக்கிறா, அவகிட்ட சொல்லாதீங்க" ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த ராணுவ வீரர்.!?