அடேங்கப்பா.. நமது வீட்டு சமைலறையில் உள்ள பெருங்காயத்தால் இவ்வுளவு நன்மைகளா?.. மக்களே தெரிஞ்சிக்கோங்க.!



Benefits of perungayam

ஈரான், ஆப்கானிஸ்தானை தாயகமாக கொண்ட பெருங்காயம் காரத்தன்மை மற்றும் கசப்பு தன்மை கொண்டது ஆகும். இது நரம்புகளை தூண்டி உணர்வுகளை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது. உடல் வெப்பத்தையும் குறைக்கும். 

நமது இந்திய சமையலிலும் பெருங்காயத்தின் பயன் தொடர்ந்து தற்போது வரை உபயோகம் செய்யப்பட்டு வருகிறது. செரிமானத்திற்கு பயன்படுத்தப்படும் கை வைத்தியத்தில் முக்கியமான இடம் பெருங்காயத்திற்கு உண்டு. 

இஞ்சி சாறு-தேனுடன் பெருங்காயத்தை கலந்து குடிக்க, குடலில் உள்ள கிருமிகள் நீங்கும். செரிமான மண்டலம் மேம்படும். வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் சரியாகும். சுவாச நோய், நரம்புத்தளர்ச்சி, வலிப்பு, மூர்ச்சை நோய் போன்றவற்றையும் இது குணப்படுத்தும். 

health tips

அதேபோல, வாந்தி-அஜீரணம், குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்பொருமல் போன்ற பிரச்சனைகளையும் குணப்படுத்துகிறது. முட்டையின் மஞ்சள் கரு - பெருங்காயம் கலந்து சாப்பிட வறட்டு இருமல் பிரச்சனை சரியாகும். பெருங்காய பொடியை வானெலியில் இட்டு மிதமான தீயில் வறுத்து சொத்தை பல்லில் உள்ள குழியில் வைத்தால் பல் வலி சரியாகும். 

வாதத்தையும் கபத்தையும் சமநிலைப்படுத்தி நச்சுக்களை அழிக்கும். நாளொன்றுக்கு 5 மில்லி முதல் 30 மில்லி வரையிலான பெருங்காயம் மட்டுமே உடலுக்கு நல்லது. அதற்கு அதிகமானது உடலுக்கு பிற பிரச்சினைகளை ஏற்படுத்தும். பித்தம் போன்றவற்றை அதிகரித்து விடும்.