ரம்பூட்டான் பழத்தின் அசத்தல் நன்மைகள்.. இப்பவே தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க.!



Benefits of Rambutan Fruit Tips Tamil

நமது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் கனிகளில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது ரம்பூட்டான். இவை பரவலாக சுற்றுலாத்தலங்களில் விற்பனை செய்யப்படும். இதன் மருத்துவ குணங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.

ரம்பூட்டான் பழம் மலேஷியா மற்றும் இந்தோனேஷியா, வியட்நாம் நாடுகளை தாயகமாக கொண்டவை ஆகும். 100 கிராம் எடையுள்ள ரம்பூட்டான் பழத்தில், 84 % கலோரியும், 40 % வைட்டமின் சி சத்தும், 28 % இரும்புச்சத்தும் உள்ளது. மேலும், பார்ப்பதற்கு மேற்புறம் முட்கள் போல தோன்றினாலும், பழத்தின் உள்ளே இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்ட பகுதிகள் இருக்கும். 

இந்த பழத்தில் உள்ள வைட்டமின் சி சத்தால் உடல் பருமன் கட்டுப்படுத்தப்படும். உடல் பருமன் உள்ளவர்கள், அதனை குறைக்க நினைத்தால் அவ்வப்போது ரம்பூட்டான் பழத்தினை சாப்பிடுவது நல்லது. 

health tips

நமது இருதய குழாய்களில் உடல் நலத்திற்கு கேடுகளை ஏற்படுத்தும் கெட்ட கொழுப்புகள் சேருவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படும் பிரச்சனையை ரம்பூட்டான் பழம் கட்டுக்குள் வைக்கிறது. இதில் இருக்கும் நியாசின் என்ற வேதிப்பொருளானது நீரிழிவு நோயினை கட்டுப்படுத்துகிறது. ஆண்டி - ஆக்சிடென்ட் சத்து ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி, கண்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்கிறது. 

உடல் உறுப்புகளை பாதுகாத்து, தலைமுடி, தோல் மற்றும் கை, கால்களை பளபளப்புடன் வைத்திருக்க உதவி செய்கிறது. உடலின் உறுப்புக்கள் சீராக இயங்கவும், ஹீமோகுளோபின் அளவை அதிஅக்ரிக்கவும், நுரையீரலை பாதுகாத்து ஆக்சிஜனை திசுவுக்கு அனுப்பும் பணியையும் இப்பழத்தில் உள்ள சத்துக்கள் திறம்பட செய்கின்றன.

health tips

83 வைட்டமின்களை கொண்டுள்ள ரம்பூட்டான் பழம், தாம்பத்திய வாழ்க்கை சிறக்க பெரிதும் உதவி செய்கிறது. எலும்பு மண்டலா வளர்ச்சிக்கு உதவும் கால்சியம், பாஸ்பிரஸ் போன்ற சத்துக்களும் இக்கனியில் உள்ளது. ரம்பூட்டான் பழத்தின் தோல்பகுதி சீதபேதியை கட்டுப்படுத்தும். நாட்பட்ட நோய்களும் கட்டுக்குள் வரும். 

ரம்பூட்டானை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை உயரும். உடலின் சீரான வளர்ச்சியை உறுதி செய்யும். கார்போஹைட்ரேட், புத்தரும் போன்ற சத்துக்கள் இருப்பதால் உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றல் கிடைக்கிறது. உடலில் நீரிழப்பு ஏற்படாமல் இருக்கவும், நாக்கு வறண்டு போகாமல் இருக்கவும், நாவறட்சியை உடனடியாக சரி செய்யவும் ரம்பூட்டான் உதவி செய்கிறது. மேலும், புற்றுநோயையையும் தடுக்கிறது.