மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடலாமா.? ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரை.!!
வாழைப்பழம் அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறந்த உணவாகும். இது இதய ஆரோக்கியம் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழைப்பழத்தில் அடங்கி இருக்கும் அதிகமான சத்துக்கள் உடலுக்கு வலிமையை அளிக்கிறது. இத்தனை சிறப்புகள் வாழைப்பழத்தில் இருந்தாலும் அவற்றில் இருக்கும் இனிப்பு சுவை காரணமாக இவற்றை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாமா .? என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கான விளக்கத்தை இந்த பதிவில் காணலாம்.
வாழைப்பழத்தில் அடங்கி இருக்கும் சத்துக்கள்
வாழைப் பழத்தில் பொட்டாசியம், மக்னிசியம், மாங்கனிசு, புரதம், வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு உடலின் செரிமானம் மேம்படவும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் வாழைப்பழம் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குவதோடு மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் இயக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா.?
பொதுவாக எல்லா பழங்களிலும் சர்க்கரை இருந்தாலும் வாழைப்பழத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதன் காரணமாக சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழத்தை தவிர்க்க வேண்டும் என பலரும் அறிவுறுத்துகின்றனர். ஆனால் பச்சை வாழைப்பழத்தில் கிளைசிமிக் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய அதிகமான நார்ச்சத்து, கார்போஹைட்ரேடுகள் ரத்தத்தில் கலப்பதை தாமதப்படுத்துகிறது. இதன் காரணமாக இந்த பச்சை வாழைப்பழத்தை சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முறை எடுத்துக் கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இதையும் படிங்க: ஷாக்கிங்... 40 வயதை தாண்டியவரா நீங்கள்.? இந்த புற்றுநோய் உங்களையும் தாக்கலாம்.!!
செவ்வாழைப்பழம் மற்றும் நேந்திரம் பழம் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இதனால் இந்த பழங்களையும் சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 1 அல்லது 2 பழங்கள் சாப்பிடலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால் அதிகமாக சர்க்கரை சத்து இருக்கக்கூடிய பூவம் பழம் மற்றும் ரஸ்தாலி போன்ற வாழைப்பழங்களை அறவே தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்
இதையும் படிங்க: ஷாக்கிங்... கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.? அலட்சியம் வேண்டாம்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!