ஷாக்கிங்... கால்களில் இந்த அறிகுறிகள் இருக்கிறதா.? அலட்சியம் வேண்டாம்.!! மருத்துவர்கள் எச்சரிக்கை.!!



do-you-have-these-symptoms-in-leg-dont-neglect-doctors

தற்காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது உயர் ரத்த அழுத்தம். மனித உடலில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்படுவதற்கும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தம் முக்கிய காரணியாக அமைகிறது. உயர் ரத்த அழுத்தம் ஒருவருக்கு இருக்கிறதா.? என்பதை அவரது கால்களில் ஏற்படும் சில மாற்றங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பாதங்களில் ஏற்படும் மாற்றங்கள்

உயர் ரத்த அழுத்தம் உடலில் உள்ள நரம்புகளில் இருக்கும் மென்மையான திசுக்களை சேதப்படுத்தும். இதுபோன்ற திசுக்கள் நம் கால் பாதங்களில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக இந்த நரம்புகள் பாதிக்கப்படுவதால் பாதங்களில் ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். இதனால் பாதங்கள் குளிர்ச்சியாக இருக்கும். இந்த அறிகுறியை வைத்து உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

health tips

தோலின் நிறங்களில் ஏற்படும் மாற்றம்

பாதங்கள் மற்றும் பாதங்களை சுற்றியுள்ள இடங்கள் சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாறியிருக்கும். மேலும் வழக்கத்திற்கு மாறாக கால்களில் அதிக கூச்ச உணர்வு இருக்கும். இதுபோன்ற அறிகுறிகளை வைத்து ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த நோய் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மாரடைப்பிற்கும் வாய் சுகாதாரத்திற்கும் உள்ள தொடர்பு.!! மருத்துவர்கள் பகிர்ந்து அதிர்ச்சி தகவல்.!!

கால்களில் ஏற்படும் பிற அறிகுறிகள்

கால்கள் உணர்வு இல்லாமல் இருப்பது மற்றும் பலவீனமாக இருப்பது போல் தோன்றுவதும் உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கால்களின் நிறத்தில் ஏற்படும் மாறுபாடுகள் நகங்களின் வளர்ச்சி குறைவது காலின் தோள்கள் பளபளப்பாக இருப்பது மற்றும் கால்களில் ஏற்படும் புண்கள் குணமாகாமல் இருப்பதும் உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறியாக இருக்கலாம் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது.

இதையும் படிங்க: கண் பார்வை குறைபாடா.? கவலை வேண்டாம்... இந்த ஒரு பானம் போதும்.!! சூப்பரான டிப்ஸ்.!!