96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பெற்றோர்களே கவனம்.. குழந்தைகள் சாக்லேட் உண்பது நல்லதா?.. கெட்டதா?.. மிஸ் பண்ணாம தெரிஞ்சுக்கோங்க..!!
சாக்லேட் சாப்பிடுவதால் நன்மை உண்டாகுமா? அல்லது தீமை உண்டாகுமா? என்பதை தற்போது காணலாம்.
சாக்லேட்டில் மன அழுத்தத்தை குறைக்கும் செரடோனின் அதிகம் இருக்கிறது. இதனால் மனநிலையை மேம்படுத்த இயலும் சாக்லேட்டின் முக்கிய மூலப்பொருள் கொக்கோதூள். இதில் குறைந்தளவு கொழுப்பே இருக்கிறது. இதனால் 60 சதவீதத்திற்கு மேல் கொக்கோ இருப்பதை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும்.
சாக்லேட் அதிகம் சாப்பிடுவதால் முதுமையை ஒத்திவைக்க இயலும். சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், வரிகளையும் சாக்லேட் குறைக்கிறது. கருப்பு சாக்லேட்டில் அதிகப்படியான மூலப்பொருள் சேர்க்கப்பட்டிருக்கும். இனிப்பும் குறைவாகவே கலந்திருக்கும். எனவே அதனை அளவுக்கு அதிகமாக உண்பதால் தலைவலி ஏற்படலாம்.
30 கிராம் கருப்பு சாக்லேட்டில் அதிகபட்சம் 10 மில்லிகிராம் காபின் ரசாயனபொருளும், பால் சாக்லேட்டில் 5 மில்லி கிராம் காபின் மூலப்பொருளும் இருக்கிறது. இது மூளைக்கு உகந்த செரோடோனின் என்டார்பின் போன்ற மூலப் பொருட்களும் இருப்பதால், மன அழுத்தம் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பாற்றலும் இருக்கிறது. ஒரு நாளைக்கு 4 கிராம் சர்க்கரையும், 1 கரண்டி சாக்லேட் பவுடர்மே குழந்தைகளுக்கு போதும்.
15 கிராம் அளவு சாப்பிடுவதாலும் எந்தவித பிரச்சனையும் கிடையாது. சிலர் அதிகப்படியான சாக்லேட் உண்பது ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். அதில் பல்சொத்தை, தலைவலி, உடல்பருமன், மூளை பாதுகாப்பு, நீரிழிவு போன்ற பிரச்சனைகள் உள்ளது. ஆனால் அளவாக சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்று கூறலாம்.