96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அட்ராசக்க.. காலையில் எழுந்து வெதுவெதுப்பான நீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?.. மிஸ் பண்ணிடாதீங்க..!!
இன்றளவில் பலரும் சூடான ஒரு கப் டீயுடன் தங்களின் காலைப் பொழுதுகளை தொடங்குகின்றனர். சிலர் தாகத்தை தணிக்க குளிர்ந்த நீரும் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். உடல் நலத்தை சீராக பராமரிக்க டீ, குளிர்ந்த நீர் போன்றவற்றை குடிக்காமல் இருப்பது நல்லது.
ஒரு டம்ளர் இளம் சூடுள்ள நீர் சிறப்பானது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். காலையில் எழுந்ததும் இளம் சூடுள்ள நீரை குடித்தால் உணவு குழாயில் இருக்கும் முந்தைய நாளின் உணவு எச்சங்கள் அகற்றப்படும். அதில் இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப்படும்.
எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகளை நாம் சாப்பிட்டிருந்தால், அதன் செரிமான முறை எளிதாக்கப்படும். உடல் எடையினை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரை குடித்தால் அந்த நீர் உடலின் வெப்பத்தை உயர்த்தி, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
அதிகளவிலான கொழுப்புகளை எரிக்கவும் இது உதவி செய்கிறது. அதேபோல உடலுக்கு தேவையான ph அளவை பராமரிக்க இளம் சூடுள்ள நீர் மிகவும் உதவி செய்கிறது. அத்துடன் இளம் சூடுள்ள நீரில், எலுமிச்சைசாறு கலந்து குடித்தால் அவற்றில் இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்றவை நமது நோய் எதிர்ப்புமண்டலத்தை பலப்படுத்தும்.