இனி சிரிப்புக்கு பஞ்சமில்லை.. விஜய் டிவியில் வருகிறது ரசிகர்களின் பேவரைட் ஷோ.! வைரல் வீடியோ!!
தட்டைப்பயறு கத்தரிக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி?.. இல்லத்தரசிகளுக்கான அசத்தல் டிப்ஸ்.!
உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் தட்டப்பயறில், சுவையான கத்தரிக்காய் புளிக்குழம்பு செய்து சாப்பிடுவது மிகவும் அருமையாக இருக்கும். சூடான சாதம், பழைய கஞ்சி, சப்பாத்தி, தோசை போன்றவற்றுக்கு ஏதுவான தட்டைப்பயிறு கத்தரிக்காய் குழம்பு (Thatta Payaru Kathirikai Kulambu) செய்வது குறித்து இன்று தெரிந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
தட்டை பயறு - 1/2 கப்,
கத்தரிக்காய் - 4,
தக்காளி - 2,
நாட்டு வெங்காயம் - 70 - 100 கிராம் அல்லது பெரிய வெங்காயம் - 2 அல்லது 3,
உப்பு - தேவையான அளவு,
மஞ்சள் தூள் - 1/4 கரண்டி,
புளிக்கரைசல் - சிறிதளவு,
குழம்பு மிளகாய் தூள் - 2 கரண்டி,
இதையும் படிங்க: சுரைக்காயில் இப்படி செய்து சாப்பிட்டுள்ளீர்களா?.. ருசித்து சாப்பிட அசத்தல் டிப்ஸ்..!
தாளிக்க
எண்ணெய் - 2 கரண்டி,
சோம்பு - 1/2 கரண்டி,
சீரகம் - 1/4 கரண்டி,
கறிவேப்பில்லை - சிறிதளவு,
பூண்டு - 6,
செய்முறை
முதலில் எடுத்துக்கொண்ட தட்டைப்பயறை வானெலியில் வதக்கி, பின் உலர வைத்து முக்கால் பதம் வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அல்லது ஒரு 4 மணிநேரம் முன்னதாக பயறை ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முதலில் ஒன்றன் பின் ஒன்றாக சேர்க்க வேண்டும். இவை வதங்கியதும் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காயை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து லேசாக நிறம் மாறும் வரை வதக்கவும்.
இவை நன்கு வதங்கியதும் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, புளிக்கரைசலை ஊற்றி லேசாக கொதிக்க விடவேண்டும். இவை கொதிக்கத் தொடங்கியதும், வேகவைத்து எடுத்துக்கொண்ட அல்லது ஊறவைத்து எடுக்கப்பட்ட தட்டைப்பயறை சேர்த்து, விருப்பம் இருப்பின் தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விடவேண்டும்.
தட்டைப்பயிறு குழம்பு கொஞ்சம் கெட்டிப்பட்டு இருந்தால் சுவையாக இருக்கும். இறுதியில் சிறிதளவு கறிவேப்பில்லை, கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான தட்டைப்பயிறு கத்தரிக்காய் குழம்பு தயார்.