குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தேவையான தாய்ப்பால் சுரப்பதற்க்கு பாட்டி கூறும் வைத்தியம்!.



Mother breastfeeding increase

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்பால் மிக அவசியமான ஒன்று. குழந்தையை பெற்ற தாய்களுக்கு சிறிது நாட்களிலேயே தாய்ப்பால் நின்றுவிடுவதால், குழந்தையின் உடல் வளர்ச்சியில் காலதாமதம் ஏற்படும். இதனால் குழந்தையின் ஆரோக்யம் குறைகிறது.

தாய் பால் அதிகம் சுரக்க அருமையான வைத்தியம் உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள் முருங்கைப்பூ, பனங்கற்கண்டு, பால், இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான அளவு முருங்கைப் பூவை எடுத்து ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்குகொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து பனங்கற்கண்டை அதில் போட்டு நன்கு கலக்க வேண்டும். பின்புபின்பு சிறிது நேரம் கழித்து சற்று ஆறவைத்து இளம் சூடில் அருந்த வேண்டும்.

இதை அருந்திய அன்றே இதற்கான பலன் தெரிந்து விடும். இதை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை நீங்கிவிடும்.

தினமும் அருந்த முடியவில்லை என்றால் வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தை பெற்ற தாய்மார்கள் இதை அருந்த வேண்டும். குழந்தையை பெற்ற தாய்க்கு தாய்ப்பால் பற்றாக்குறை இருந்தால் கண்டிப்பாக இதை பயன்படுத்த வேண்டும்.