கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
மனிதனின் உடலில் புதிய பாகம் கண்டுபிடிப்பு! அசத்தும் விங்ஞானிகள்!
மனிதனின் உடல் மிகவும் விசித்திரமான ஓன்று. இரத்தம், சதை, எலும்பு என பல மூலக்கூறுகளால் ஆனது மனிதனின் உடம்பு.
இன்றைய வளர்ந்துவரும் மருத்துவ துறையில் மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரிக்க எவ்வளவோ மருத்துவ சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொதுவாக மனிதரில் ஏற்படும் நோய்களுக்கு எதிராக போரிடுவது நமது உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திதான்.
இந்த நோய் எதிர்ப்பு சக்தியில் புதிதாக ஒரு பொருளை கண்டறிந்துள்ளதாக விஞானிகள் தெரிவித்துள்ளார். இது வருங்காலத்தில் தடுப்பூசிகள் தொடர்பான செயல்திறன்களை அதிகரிக்க உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் Garvan Institute of Medical Research இனைச் சேர்ந்த ஆய்வாளர்களால் இச் சிறிய வகை அங்கம் மெல்லிய, தட்டையான கட்டமைப்பாக நோயெதிர்ப்பு தொகுதியின் மேலாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தது.
இதை விஞ்ஞானிகள் “Subcapsular Proliferative Foci” (SPFs) எனப் பெயரிட்டுள்ளனர்.
இவ் அங்கமானது தொற்றுக்களுக்கெதிரான எதிர்த்தாக்கங்களை திட்டமிடும் உயிரியல் தலைமையகமாகத் தொழிற்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இதனை தூண்டிவிடுவதன் மூலம் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து எளிதில் குணமாக முடியும் என விஞானிகள் தெரிவித்துள்ளார்.