96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
மலச்சிக்கல், தலைவலி, சூட்டு கொப்புள பிரச்சனைகளை சரிசெய்யும் பருப்பு கீரையின் அசத்தலான நன்மைகள்.!
தவைவலி, வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்றவற்றை குணப்படுத்தும் பருப்புகீரையின் பல நன்மைகள் குறித்து தற்போது காணலாம்.
பருப்புக் கீரையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து, இளநீரில் போட்டு பருகினால் வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் சீதபேதி போன்றவை குணமடையும்.
தலைவலி உள்ளவர்கள் கூட பருப்புகீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்று போட்டால் தீராத தலைவலியும் தீரும். நெஞ்செரிச்சலும் குணமடையும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவவும் உதவுகிறது. இக்கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம்.
ரத்தத்தை சுத்தப்படுத்தும் பருப்புகீரையுடன் பூண்டு சமைத்து சாப்பிட்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பு உடனடியாக குறையும். பருப்பு கீரை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் உஷ்ணம் குறையும். மலச்சிக்கல் ஏற்படாது.
வெப்பத்தால் ஏற்படும் கொப்பளங்கள், முகப்பரு போன்றவையும் பருப்பு கீரையை மை போல் அரைத்து முகத்தில் பூசிவந்தால் சரியாகும். மேலும் இதில் கால்சியம், ஒமேகா 3 இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் வலுவடையும்.