கணவர் குறித்து அவதூறு பேசிய கள்ளக்காதலன்.. உறவுக்கு மறுத்த கள்ளக்காதலி கொடூர கொலை..! 



in Chengalpattu a Woman Killed by Affair Friend 

 

5 ஆண்டுகளாக உறவில் இருந்த கள்ளக்காதல் ஜோடி இடையே எழுந்த கருத்து வேறுபாடு காரணமாக, பெண் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் மாமல்லபுரம் பகுதியில் நடந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லம்பாக்கம், பெருமாள் கோவில் பகுதியில் வசித்து வருபவர் செல்வராணி (வயது 38). இவருக்கு திருமணம் முடிந்து கணவர், குழந்தைகள் இருக்கின்றனர். செல்வராணி மற்றும் அவரின் கணவர் இடையே அவ்வப்போது குடும்பச்சண்டை உண்டாகி இருக்கிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து அவர் வெளியேறினார். 

இதையும் படிங்க: மதுரை: 18 வயதில் வழிப்பறி கொலை., 20 வயதில் வழக்கு விரக்தியால் தற்கொலை.. இளைஞரின் விபரீத முடிவு.!

மனைவி மாயம்

தாய் வீட்டுக்கு மனைவி செல்லாத நிலையில், அவர் மாயமானதாக செல்வராணியின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, செல்வராணியின் உடல் ஒத்திவாக்கம் வனப்பகுதியில் இருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது உடல் அதிகாரிகளால் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

Crime

கள்ளக்காதல் பழக்கம்

செல்வராணி மாயமான பின்னர், அவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டவர்கள் குறித்து விசாரித்தபோது, குமரேசன் என்பவர் சிக்கி இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமரேசனுக்கு, திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். குமரேசன் - செல்வராணி இடையே ஏற்பட்ட பழக்கம், பின்னாளில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

பெண் கொலை

இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளாக கள்ளக்காதல் உறவில் இருந்த நிலையில், இந்த விஷயம் கணவருக்கு தெரியவந்தே தம்பதிகளிடையே கருத்து முரண் நிலவி இருக்கிறது. சம்பவத்தன்று தம்பதியடையே நடந்த சண்டையில் வீட்டில் இருந்து வெளியேறிய செல்வராணியை குமரேசன் நேரில் சந்தித்துள்ளார். பின் இருவரும் உல்லாசத்துக்கு தயாரானபோது, குமரேசன் செல்வராணியின் கணவரை அவதூறு பேசி இருக்கிறார். இது கள்ளக்காதல் ஜோடி இடையே சண்டையை ஏற்படுத்தியது. செல்வராணி உறவுக்கும் மறுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் செல்வராணியை குமரேசன் கொலை செய்து தப்பிச் சென்றது உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் குமரேசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இதையும் படிங்க: தூத்துக்குடியை பதறவைத்த தாய்-மகள் கொலை விவகாரம்.. குற்றவாளி சுட்டுப்பிடிப்பு.!