வாயில் வைத்ததும் கரையும் சுவையில் பீட்ரூட் அல்வா..! ரத்தத்தை அதிகரிக்கும் சத்தான இனிப்பு.!



delicious-beetroot-halwa

பீட்ரூட்டில் கலோரிகள் குறைவு என்பதால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது சுவை மிகுந்த பீட்ரூட் அல்வா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

நெய் - 7 தேக்கரண்டி 

ஏலக்காய் - 4 ( பொடியாக்கியது )

பீட்ரூட் - 1/4 கிலோ ( துருவியது )

பால் - 1 கப் 

முத்திரிப்பருப்பு - 10

உலர் திராட்சை - 10

சர்க்கரை - 1/4 கிலோ 

beetroot

செய்முறை :

முதலில் அடுப்பைப் பற்ற வைத்து ஒரு வாணலியை வைக்கவும். அதில், 3 தேக்கரண்டி நெய் சேர்த்து மிதமான தீயில் 10 முந்திரிப்பருப்பு மற்றும் 10 உலர் திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். 

இப்போது, அதே வாணலியில் துருவிய பீட்ரூட்டை சேர்த்து பச்சை வாசனை நீங்க வதக்கிக் கொள்ளவும். பின்பு, 1 கப் பால் மற்றும் 1/4 கிலோ சர்க்கரை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.

பால் அளவு குறைந்து கெட்டி பதம் வந்தவுடன் மீதம் இருக்கும் நெய் சேர்த்துக் கொள்ளவும். இறுதியில், ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை சேர்த்து இறக்கி விடவும். சுவையான பீட்ரூட் அல்வா தயார்.