செங்கல்பட்டு: ஓடும் பள்ளி வாகனத்தில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உதவியாளர் அதிர்ச்சி செயல்.!



in Chengalpattu School Bus Cleaner Arrested under Pocso 

 

பள்ளி பேருந்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் கிராமத்தில் தனியார் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகிறார்கள். 

இதையும் படிங்க: #JUSTIN: சண்டே கொண்டாட்டத்தில் ஓவர் குடி.. 19 வயது கல்லூரி மாணவி மரணம்.. சென்னையில் ஷாக்.!

பள்ளி மாணவ - மாணவிகளின் வசதிக்காக, நிர்வாகத்தின் சார்பில் பேருந்து வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அப்படியாக, ஒரு வாகனத்தில் உதவியாளராக, உள்ளூரைச் சேர்ந்த முருகன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். 

Chengalpattu

பாலியல் தொல்லை

இதனிடையே, சம்பவத்தன்று முருகன், அதே பள்ளியில் பயின்று வரும் வடக்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஓடும் வேனில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 

பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட சிறுமி, உடல்நலக்குறைவை எதிர்கொண்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் மகளிடம் கேட்டபோது, முருகனின் அதிர்ச்சி செயல் தெரியவந்தது.

இதனையடுத்து, சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்த பெற்றோர், அங்குள்ள பாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர், முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இதையும் படிங்க: 14 வயது மாணவரை மிரட்டிய எச்.எம்.. தூக்கில் தொங்கிய சிறுவன்.. சென்னையில் சோகம்.. தாய் குமுறல்.!