தூத்துக்குடி: பீடை குடியால் குடும்பமே காலி.. கணவரை கொன்ற மனைவி.. தவிக்கும் 2 வயது குழந்தை..!



in-thoothukudi-a-wife-killed-her-husband

 

குடிப்பழக்கம் இன்னும் எத்தனை குடும்பத்தின் நிம்மதியை இழக்க காரணமாக அமையப்பிகிறதோ? என எண்ணினால் நெஞ்சம் பதறுகிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர், சண்முகபுரம் பகுதியில் வசித்து வருபவர் சேர்மதுரை (வயது 30). இவரின் மனைவி மீனா தேவி (வயது 28). தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து, 2 வயதுடைய ஆண் குழந்தை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இருவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது.

இதையும் படிங்க: தூத்துக்குடி: 4 மணிநேரம் மருத்துவர் இன்றி துடிதுடித்த கர்ப்பிணி.. பனிக்குடம் உடைந்து தாய்-சேய் துள்ளத்துடிக்க பலி.!

திருச்செந்தூர், வீரபாண்டிய பட்டினம் பகுதியில் சேர்மதுரை உரக்கடை நடத்தி வருகிறார். மதுபோதைக்கு அடிமையான சேர்மதுரை, தினமும் மதுபானம் அருந்திவிட்டு வீட்டிற்கு வருவதும், மனைவியிடம் தகராறு செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இதனால் கணவரிடம் கோபித்துக்கொள்ளும் மீனா, அவ்வப்போது தனது தாய் வீட்டிலும் சென்று தங்கி இருப்பார். போதை தெளிந்ததும் இனி குடிக்க மாட்டேன் என மனைவியை சமாதானம் செய்யும் சேர்மதுரை, அவரை வீட்டுக்கு அழைத்து வருவதை தொடர்ந்து இருக்கிறார். 

Thoothukudi

கல்லால் தாக்கியதில் சாவு

இந்நிலையில், நேற்று சேர்மதுரை வழக்கம்போல போதையில் வீட்டுக்கு வரவே, அதனை மீனா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் உண்டாகியுள்ளது. வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மீனா, சிமெண்ட் கல்லை எடுத்து கணவரை கடுமையாக தாக்கினார். இதனால் சேர்மதுரை கீழே விழுந்தார். 

ஆத்திரத்தில் கணவரை தாக்கிவிட்டு, பின் அவரை எழுப்ப முற்பட்டுள்ளார். அப்போது, சேர்மதுரை உயிரிழந்தது தெரியவந்தது. இதனையடுத்து, மீனா தேவி திருச்செந்தூர் காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று விஷயத்தை கூறியுள்ளார். பின் மீனா கொடுத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சேர்மதுரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மீனாதேவியை கைது செய்தனர். அவரின் கைக்குழந்தை அம்மாவை தேடி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.

குடி என்ற பீடையை விட முடியாத பட்சத்தில் திருமணம் மட்டும் எதற்கு? குடிகாரன்களுக்கு பெண் கொடுக்காதீர்..

 

இதையும் படிங்க: குழந்தை பிறந்த 10 வது நாள்.. மருத்துவமனை கழிவறையில் வழுக்கி விழுந்த இளம்பெண் மரணம்.. குடும்பத்தினர் கண்ணீர்.!