ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
'13' வயது சிறுமியை மிரட்டி கற்பழித்த '15' வயது சிறுவன்.! "இதை வெளியே சொன்னா அவ்வளவு தான்.!
குஜராத் மாநிலத்தில் 13 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் அமைந்துள்ள லிம்பயாட் காவல் நிலையத்திற்கு வந்த தாய் தனது 13 வயது மகளை தன்னுடன் வேலை பார்க்கும் 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் சிறுவனை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைச் சம்பவங்கள் வெளியாகி இருக்கிறது.
சிறுமியின் தாயாருடன் வேலை செய்வதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட 15 வயது சிறுவன் சிறுமியின் தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் சென்று சிறுமியிடம் தண்ணீர் கேட்டிருக்கிறான். அந்த சிறுமி வீட்டிற்குள் அனுமதித்ததும் கதவை பூட்டிவிட்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிகிறது. மேலும் இதனை வெளியே சொன்னால் சிறுமியையும் அவரது தம்பியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறான் இதனால் சிறுமி பயந்து யாரிடமும் கூறவில்லை.
இந்நிலையில் 2 மாதங்கள் கழித்து மீண்டும் சிறுமியை தொடர்பு கொண்ட சிறுவன் வீட்டிற்கு வருவதாக தெரிவித்துள்ளான். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி 2 மாதங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்களை தாயிடம் கூறி அழுதுள்ளார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறுவனை போக்சோ சட்டம் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.