திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வாயில் துணியை வைத்து அடைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்... 12 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.!!
ஒடிசா மாநிலத்தில் 12 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்தக் கொடூர சம்பவத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் சிறுமியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் 3 நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி
ஒடிசா மாநிலத்தின் நபரங்க்பூர் என்ற இடத்தில் முட்புதர்கள் நிறைந்த பகுதியில் இருந்து 12 வயது மதிக்கத்தக்க சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் உடல் முழுவதும் கடுமையான காயங்கள் இருந்தன. மேலும் சிறுமியின் வாயில் துணி வைத்து அடைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.
கூட்டு பாலியல் வன்புணர்வு
இதனைத் தொடர்ந்து சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையும் படிங்க: ஷாக்கிங்... வங்கி பெண் ஊழியர் பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய ஓட்டுனர்... காவல்துறை நடவடிக்கை.!!
3 குற்றவாளிகள் கைது
இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக 3 குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் எதிரான கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் ஒடிசா கூட்டு பாலியல் வன்புணர்வு சம்பவம் மக்களை அச்சமடைய செய்திருக்கிறது.
இதையும் படிங்க: கொடுமையின் உச்சம்... 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு... பைக்கில் அழைத்துச் சென்று நாசம் செய்த நபர்.!!