மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷாக்கிங்... வங்கி பெண் ஊழியர் பலாத்காரம்... வீடியோ எடுத்து மிரட்டிய ஓட்டுனர்... காவல்துறை நடவடிக்கை.!!
நாட்டில் பெண்களுக்கு எதிராக தினமும் நடைபெறும் கற்பழிப்பு சம்பவங்கள் மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்நிலையில் மும்பையைச் சேர்ந்த பெண் வங்கி ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.
டிரைவருடன் நட்பு
மும்பையில் இயங்கி வரும் தனியார் வங்கியில் 41 வயது பெண், அலுவலக ஊழியராக பணியாற்றி வருகிறார். அதே வங்கியில் ஓட்டுனராக பணிபுரியும் நபருடன் அந்தப் பெண்ணிற்கு நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்களாக பழகி வந்துள்ளனர். ஆனால் அந்த ஓட்டுநர் அலுவலக ஊழியருடன் ஏற்பட்ட நட்பை தவறான கண்ணோட்டத்தில் அணுகி இருக்கிறார்.
பாலியல் வன்புணர்வு மற்றும் ஆபாச வீடியோ
இந்நிலையில் 41 வயது வங்கிப் பெண் ஊழியரை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை வீடியோவாக பதிவு செய்து வைத்து அந்தப் பெண்ணை மிரட்டி மேலும் கற்பழிப்பு செய்து இருக்கிறார். இதனால் வங்கி பெண் ஊழியர் மனதளவிலும் பாதிக்கப்பட்டார்.
இதையும் படிங்க: வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி... இளம் பெண் பாலியல் பலாத்காரம்... ஜிம் ஓனர் கைது.!!
காவல்துறையின் நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து பெண் ஊழியர் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் இது தொடர்பாக விசாரித்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஓட்டுநரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து செல்போன் பறிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் பலாத்காரம்.?... தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி... தலை துண்டிக்கப்பட்ட பெண் உடல்.!!