மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குற்றால அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.! ஆசையாக குளிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனத்த மழை பெய்து வருகிறது. தென்காசி மாவட்டத்திலும் பல இடங்களிலும் மழை பெய்துள்ளது. இதனால் குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடரும் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
திடீர் வெள்ளப் பெருக்கு
மேலும் பழைய குற்றாலம் அருவியில் மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் அருவியில் குளித்துக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இதையும் படிங்க: #Watch: குற்றால அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளம்; சிறுவன் பலி., தலைதெறிக்க ஓடிய சுற்றுலாப்பயணிகள்.!
உயிரிழந்த சிறுவன்
மே
லும் திடீர் வெள்ளப்பெருக்கில் குற்றால அருவியில் குடும்பத்துடன் குளிப்பதற்கு சென்ற அஸ்வின் என்ற 17 வயது சிறுவன் மாயமாகியுள்ளார்.அதனைத் தொடர்ந்து மாயமான சிறுவனை தீயணைப்பு துறையினர், காவல்துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் அருவியில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் சிறுவன் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது
இதையும் படிங்க: வெகுநேரமாக சாலையில் நின்ற கார்.! சடலமாக கிடந்த மூவர்.! நடந்தது என்ன?? பகீர் சம்பவம்!!