கூல்ட்ரிங்ஸ்தானேனு நம்பி குடித்த இளம் பெண்.. பேருந்தில் வைத்து பாலியல் கொடுமை செய்த கொடூரம்.. ஒருவர் கைது.



19 years old girl abused in navi mumbi

19 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நவி மும்பையின் கார்கர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவரை பேருந்து ஒன்றில் வைத்து இரண்டு பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து நடந்த விசாரணையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குற்றவாளிகள் இருவரும் ஒரே கட்டிடத்தில் தான் தங்கிவந்துள்ளனர்.

மேலும் சம்பவம் நடந்த அன்று அங்கு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அந்த பெண்ணிற்கு கூல்ட்ரிங்சில் மயக்கமருந்து கொடுத்து, பின்னர் அந்த பெண்ணை தூக்கிக்கொண்டு அருகில் நின்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர்.

இரண்டு குற்றவாளிகளில் ஒருவன் அந்த பேருந்தின் ஓட்டுநர் என தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக இருந்த இரண்டு குற்றவாளிகளில் ஒருவனை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவனை போலீசார் தேடி வருகின்றனர்.