96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பிறந்தநாள் பார்ட்டியின் ஹோட்டல் பில்... ஷேர் செய்வதில் ஏற்பட்ட மோதல்... 20 வயது இளைஞருக்கு நேர்ந்த கொடூரம்.!
மும்பையில் பிறந்த நாள் பார்ட்டியின் போது உணவுக்கான பில்லை பகிர்ந்து கொள்வதில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 வயது இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை பைகன்வாடி பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்று இருக்கிறது. கடந்த மே மாதம் 31ஆம் தேதி சபீர் அன்சாரி என்ற 20 வயது இளைஞர் தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாலையோர உணவகத்தில் பார்ட்டி கொடுத்திருக்கிறார். அனைவரும் தங்களுக்கு விருப்பமான உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டுள்ளனர். பின்னர் சர்வர் வந்து பில்லை நீட்டிய போது அதனை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் சாப்பிட்டதற்கு பத்தாயிரம் ரூபாய் பில் வந்திருக்கிறது.
பிறந்தநாள் பார்ட்டி என்பதால் சபீர் அன்சாரியே அந்த பில்லை செலுத்தியுள்ளார். மேலும் தனது நண்பர்களிடம் குறிப்பிட்ட பணத்தை யாவது தனக்கு செலுத்துமாறு கேட்டு இருக்கிறார். இது தொடர்பாக அவர்களுடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சிவாஜி நகர் பகுதியில் சபீர் தனது மற்றும் நண்பர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஷாருக் மற்றும் நிசார் உட்பட நான்கு பேர் சபீரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர் மேலும் அவரை கூர்மையான ஆயுதத்தால் குத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த சபீரை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்து வந்தனர். அப்போது 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஷாருக் மற்றும் நிசார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நண்பனை கொலை செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.