பெண்ணின் தலைக்குள் பாய்ந்த தண்ணீர் தொட்டி; ஆப்பிள் சாப்பிட்ட ஆன்டியை அதிரவைத்த சம்பவம்.!



Water Tank Fallen into Women Luckily She Escape 

ஒவ்வொரு வீடுகளிலும் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி என்பது இன்றளவில் மிகவும் முக்கியமான ஒன்றாகிவிட்டது. அவரவரின் வசதிக்கேற்ப கான்கிரீட், பிளாஸ்டிக் டேங்குகள் வாங்கி பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. 

மழை-சூறைக்காற்று சமயங்களில் டேங்க் காலியாக இருந்தால், சரியான அமைப்புகள் பொறுத்தப்படாத பட்சத்தில் அவை பறந்து செல்லும் சம்பவங்கள் நிகழலாம். ஒருசில நேரம் பிளாஸ்டிக் ரக தொட்டிகளை பொருத்தும்போது, அவை கீழே தவறி விழும் சூழலும் ஏற்படும்.

 

இதையும் படிங்க: பெண்ணின் தங்க சங்கிலியை நொடியில் பறித்த திருடன்; ஜன்னலோரம் மெய்மறந்து செல்போன் பார்த்தபடி இருந்தவருக்கு விபரீதம்.!

சூரத்தில் நடந்த சம்பவம்

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் பகுதியில் வசித்து வரும் நடுத்தர வயது பெண்மணி, தனது வீட்டின் வாசலில் ஆப்பிள் சாப்பிட்டவாறு நடந்து வந்துகொண்டு இருந்தார். அச்சமயம், மேலே இருந்து தண்ணீர் தொட்டி கீழே விழுந்தது. 

நல்வாய்ப்பாக பெண்ணின் தலைக்குள் புகுந்து தொட்டி வெளியே வந்தது. இதனால் அவர் எந்த விதமான பலத்த காயமும் இன்றி உயிர்தப்பினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: பரமா.. மரண பீதியை காண்பிச்சிட்டாங்கடா.. சிங்கத்தை கண்டு தலைதெறித்து ஓடிய தம்பதி.!