பள்ளி மாணவிகளுக்கு வழங்க 50000 ஸ்மார்ட் போன்கள் தயார் - பஞ்சாப் முதல்வர் அதிரடி அறிவிப்பு!
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்பதால் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் தடைப்பட்டுள்ளன.
மாணவர்கள் 4 மாதங்களுக்கு மேலாக வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருப்பதால் அவர்களின் படிப்பு திறன் குறைய வாய்ப்புள்ளது. மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது அவர்கள் பாடங்களில் கவனம் செலுத்த சிரமம் ஏற்படலாம்.
இதனால் மாநில அரசுகள் ஆன்லைன் வகுப்புகள், கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவதை ஊக்குவித்து வருகின்றன. ஆனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் போன்கள் மிகவும் அவசியம்.
இதனை கருத்தில் கொண்ட பஞ்சாப் மாநில முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்கள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி தற்போது முதற்கட்டமாக 12 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கு வழங்க 50000 ஸ்மார்ட் போன்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.