குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
74 வயதில் தாயான பெண்.! 'IVF' கருத்தரித்தல் முறையின் சாதனை.!
ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட ஏர்ரமட்டி மங்கம்மா என்பவர் தனது 74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார். இவர் உலகிலேயே வயதான தாய் என்ற சாதனையை படைத்துள்ளார். தற்போது 79 வயதான இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு செயற்கை கருத்தரித்தல் முறையின் மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
50 வயதிற்கு மேல் பெண்களுக்கு கருத்தரிக்கும் வாய்ப்புகள் குறைவு என்று மருத்துவ உலகம் தெரிவித்த போதும், கடந்த 2019 ஆம் ஆண்டு ஐவிஎஃப் மூலம் தனது 73 ஆம் வயதில் மங்கம்மா கருத்தரித்தார். 72 வயதில் அமிர்தசரசை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்து உலகின் வயதான தாயாக இருந்து வந்தார். அந்த சாதனையை மங்கம்மா 2019இல் முறியடித்துள்ளார்.
வயது முதிர்ச்சி காரணமாக மங்கம்மாவிற்கு கரு முட்டைகள் வளர்ச்சி இருக்கவில்லை. கொடையாளரிடமிருந்து முட்டைகள் எடுக்கப்பட்டு மங்கம்மாவின் கணவரான சீதாராம் ராஜாராவிடமிருந்து பெறப்பட்ட விந்தணுக்களுடன் சேர்க்கப்பட்டது. முதல் சுழற்சியிலேயே மங்கம்மா கருத்தரித்துள்ளார்.
பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளும் நல்ல ஆரோக்கியத்துடன் தலா 2 கிலோ எடையுடன் பிறந்ததாக கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகள் பிறந்த ஒரு ஆண்டிலேயே மங்கம்மாவின் கணவர் சீதாராம் தனது 84 வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். தனது அண்டை வீட்டுக்காரர் 50 வயதில் ஐவிஎஃப் முறையின் மூலம் குழந்தை பெற்றது, மங்கம்மாவிற்கு நம்பிக்கை அளித்ததாக கூறுகிறார்.