குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
8 போலீசாரை சுட்டுக்கொன்ற வழக்கில் தேடப்பட்ட பிரபல ரவுடி கைது!
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் நகரம் அருகே உள்ள பிக்ரு என்ற கிராமத்தில் விகாஸ் துபே என்ற ரவுடி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து விகாஸ் துபேவை தேடி போலீசார், குறிப்பிட்ட இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அங்கு இருந்த ரவுடிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
போலீசார் ரவுடி கும்பலை சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். அங்கு ரவுடி கும்பல் நடத்திய தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். அங்கு நடந்த சம்பவம் கான்பூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
#WATCH Madhya Pradesh: After arrest in Ujjain, Vikas Dubey confesses, "Main Vikas Dubey hoon, Kanpur wala." #KanpurEncounter pic.twitter.com/bIPaqy2r9d
— ANI (@ANI) July 9, 2020
இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்த உத்தரபிரதேச போலிசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். முதல்கட்டமாக 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், ரவுடி விகாஸின் நெருங்கிய கூட்டாளியான அமர் துபேவை போலீசார் நேற்று அதிகாலை சுட்டுக்கொன்றனர்.
இந்தநிலையில், விகாஸ் துபேவை கைது செய்யும்வகையில் துப்பு கொடுப்பவருக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதை ரூ.5 லட்சமாக உத்தரபிரதேச அரசு உயர்த்தி உள்ளது. இந்த நிலையில், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளான்.