மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
30 வயது காதலரை கரம்பிடிக்க இந்தியா வந்த 51 வயது பிரேசில் பெண்.. கணவர், மகனை கைவிட்டு காதல் திருமணம்.!
தனது மகனை விட வயது குறைவான குஜராத்திய இளைஞனை கரம்பிடிக்க, பிரேசில் பெண் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு இந்தியா வந்த சம்பவம் நடந்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச், சுற்றுலாவுக்கு பெயர்போன பகுதி ஆகும். இங்குள்ள ஹோட்டல் ஒன்றில் காவலாளியாக சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பின்த் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பவன் கோயல் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: மலைப்பகுதியில் தனியாக ஒதுங்கிய காதல் ஜோடி; கதறவிட்டு, அடித்துநொறுக்கிய இளைஞர் கூட்டம்...!
காவலாளியுடன் அறிமுகம்
கடந்த ஆண்டு பிரேசில் நாட்டை சேர்ந்த 51 வயதுடைய பெண்மணி ரோஸி நைட் ஷிகேரா என்பவர், கட்ச்-க்கு சுற்றுலா வந்தபோது, காவலாளியான பவனுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. பின் இருவரும் பேசிப்பழகி இருக்கின்றனர்.
இதனிடையே, கடந்த ஓராண்டாக இருவரும் காதல் வயப்படும் அளவு நெருக்கம் கொண்ட நிலையில், ரோஸி தனது குடும்பத்தை பிரிந்து காதலருடன் சேர்ந்து வாழலாம் என ஆசைப்பட்டுள்ளார். இதனை காதலரிடமும் தெரிவித்து சம்மதம் வாங்கி இருக்கிறார்.
வயது, மொழியை கடந்த காதல்
இதனையடுத்து, ரோஸி தனது கணவர், குழந்தைகளை பிறந்து காதலரை தேடி குஜராத் வந்துள்ளார். இருவரும் சமூக வலைத்தளம் வாயிலாகவே பேசி தங்களின் காதலை வளர்த்து இருக்கின்றனர். இருவரின் வயது, மொழி போன்றவை வெவ்வேறாக இருந்தாலும், அவர்களை அன்பு இணைத்து இருக்கிறது.
திருமணம் செய்ய விருப்பம்
ரோஸிக்கு திருமணமாகி கணவர், 32 வயதுடைய மகன் இருக்கும் நிலையில், அவர் பவனை சந்திக்க வந்துள்ளார். பின் இவர்கள் டெல்லியில் குடியேறிய நிலையில், தற்போது திருமணத்திற்கு தயாராகி இருக்கின்றனர். விரைவில் திருமணம் நடந்து அவர் இந்தியாவிலேயே குடியேறவிருப்பதால், அதற்கான விண்ணப்பமும் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது.
சொந்த ஊரில் கணவர், திருமணமான மகன் இருக்க, தனது மகனை விட வயது குறைவான இந்தியர் ஒருவரை பெண் திருமணம் செய்ய வந்துள்ளது நெட்டிசன்களிடம் பலதரப்பட்ட கருத்தையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அம்மா எரியுதே.. உடலில் தீப்பற்றி கதறிய சிறுமி.. ஆளரவமில்லா பகுதியில் காதலன் திகில்.. பரிதாப மரணம்.!