53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அம்மா எரியுதே.. உடலில் தீப்பற்றி கதறிய சிறுமி.. ஆளரவமில்லா பகுதியில் காதலன் திகில்.. பரிதாப மரணம்.!
சிறுவயது காதலரை கரம்பிடிக்க நினைத்த பெண்மணி, பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பயங்கரம் கடப்பாவை அதிரவைத்ததுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டம், கோபாவரம் தேசிய நெடுஞ்சாலைப்பகுதியில் ஆட்கள் நடமாட்டமே இல்லாத இடம் ஒன்றில், இளம்பெண் தீப்பற்றி எரிந்தவாறு தன்னை காப்பாற்றக்கூறி சாலையில் கதறியபடி ஓடிவந்துள்ளார்.
இதையும் படிங்க: கால்வாய்க்குள் பாய்ந்த கார்; துரிதமாக செயல்பட்டு தந்தை-மகளை மீட்ட இளைஞர்.. குவியும் பாராட்டுக்கள்.!
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், தீயை அணைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெண்ணின் மரணத்திற்கு முன்பு வாக்குமூலமும் பெறப்பட்டது.
சிறுவயது காதல்
விசாரணையில், கடப்பா மாவட்டத்தில் உள்ள பத்வேல் ராமாஞ்னேய நகரில் வசித்து வருபவர் விக்னேஷ் (வயது 20). தீயில் கருகி உயிரிழந்த பெண் தஸ்தகிரிய்மா (வயது 18). இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வந்தபோது காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் சிறுவயதில் இருந்து காதலித்து வந்தார்கள் என கூறப்படுகிறது.
வேறொரு பெண்ணுடன் காதலன் திருமணம்
இதனிடையே, விக்னேஷ் வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, கல்லூரி மனைவியை கைவிட்டு திருமணம் செய்துள்ளார். அந்த பெண் தற்போது கர்ப்பமாகவும் இருக்கிறார். விக்னேஷின் கல்லூரி காதலி தனது காதலில் உறுதியாக இருக்க, அவர் விக்னேஷிடம் தன்னை திருமணம் செய்யக்கூறி வற்புறுத்தியுள்ளார்.
தீவைத்து எரித்துக்கொலை
இதனால் அவருக்கு தீவைத்து கொளுத்தி கொலை செய்யலாம் என முடிவெடுத்த விக்னேஷ், ஆசையாக பேசி ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று, சிகிரெட் லைட்டரால் பெண்ணுக்கு தீவைத்து இருக்கிறார். இதனால் பெண்ணின் உடலில் இருந்த ஆடை தீப்பற்றி எரிந்து இருக்கிறது. விக்னேஷ் தப்பிச் சென்றார். தலைமறைவான அவர் கைது செய்யப்பட்டார்.
ஆசையாக அத்துமீறி கொடூரம்
முதல் காதலியை கொலை செய்ய, அவருடன் ஆசையாக பேசி காட்டுக்குப்பகுதிக்கு அழைத்துச் சென்றவர் பலாத்காரம் செய்துவிட்டு பின் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்... 6 வயது சிறுமி படுகொலை.!! 3 பெண்கள் வெறி செயல்.!!