96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
டிக்கெட் வாங்குவதில் தள்ளு முள்ளு!.. போலீஸ் தடியடி..! கூட்ட நெரிசலில் கிக்கிய சிறுமி பரிதாப பலி..!
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 20 ஆம் தேதி நடை பெற்ற முதலாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 வது போட்டி நாளையும் 3 வது மற்று இறுதிப்போட்டி 25 ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இந்த நிலையில், 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் 3 வது போட்டியை காண டிக்கெட் விற்பனை செய்யப்படும் ஹைதராபாத்தில் உள்ள ஜிம்கானா கிளப் அருகே இன்று பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் ஓரே நேரத்தில் குவிந்தனர்.
அப்போது டிக்கெட் வாங்க ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டியின் காரணமாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தில் பலர் கீழே விழுந்து கூட்ட நெரிசலில் மிதிபட்டு படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் டிக்கெட் வாங்க வந்து, கூட்ட நெரிசல் சிக்கிய இளம் பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.