ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
துண்டு துண்டாக வெட்டி... "ப்ளீஸ் அப்பா... அம்மாவ விட்டுடுங்க..." கெஞ்சிய மகள்.! கொடூர தந்தை செய்த வெறி செயல்.!
குஜராத் மாநிலத்தில் தாய் கொடுமை செய்யப்படுவதை தடுக்க வந்த மகளை தந்தையே துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தை ஒட்டியுள்ள குஜராத் மாநிலத்தின் எல்லை புறநகரங்களான தாத்ரா மற்றும் நாகர்ஹவேலி பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் மேத்தா (53). இவர் அப்பகுதியில் நூல் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரேஷ்மா என்ற பெண்ணுக்கும் 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு 18 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் இருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போதெல்லாம் யோகேஷ் மேத்தா தனது மனைவியை பயங்கரமாக தாக்கி இருக்கிறார். சம்பவம் நடந்த தினத்தன்று கணவன் மனைவிக்கு இடையே பயங்கரமான சண்டை நடந்துள்ளது. அப்போது ஆத்திரத்தில் இருந்த யோகேஷ் மேத்தா தனது மனைவியை கத்தியால் குத்தி இருக்கிறார். இதனை தடுக்க முயன்ற அவரது 15 வயது மகளையும் கத்தியால் குத்தியுள்ளார் . இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனது மகளின் சடலத்தை மறைக்க முயன்ற யோகேஷ் அதை கத்தி மற்றும் சுத்தியல் கொண்டு சிறு துண்டுகளாக வெட்டி இருக்கிறார். மேலும் ஒரே இடத்தில் போட்டால் மாட்டி விடுவோம் என நினைத்து பல்வேறு பகுதிகளில் உடல் பாகங்களை வீசி இருக்கிறார். அந்தப் பகுதிகளில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதால் இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை இறந்தது யோகேஷ் மேத்தாவின் மகள் தான் என்பதை உறுதி செய்தது. மேலும் அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறியதால் அவர் மீது சந்தேகம் வலுத்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையின் கடுமையான விசாரணையில் தன் மனைவியையும் மகளையும் கொலை செய்ததை ஒத்துக் கொண்டார் யோகேஷ் மேத்தா. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள காவல் துறையினர் கொலை எப்போது நடந்தது என்பது பிரத பரிசோதனை அறிக்கை பின்பு தான் தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.