96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
வீட்டு வாசல் அருகே செருப்பு வைத்த பக்கத்து வீட்டுக்காரர்; தகராறில் அடித்து கொலை செய்த தம்பதியினர்..!!
வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை, கொலை செய்த தம்பதி.
மும்பையில் வீட்டு வாசலருகே செருப்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை, தம்பதி கொலை கொலை செய்துள்ளனர். உயிரிழந்த நபர் தானேவின் நயா நகரில் வசித்து வந்த அப்சர் காத்ரி (54). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தம்பதிக்கும் வீட்டின் வாசலருகே செருப்பு வைப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு இது தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அப்சர் காத்ரி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த தம்பதி மீது கொலை வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை கைது செய்துள்ளனர். பெண்ணின் கணவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.