குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
மாமா பிஸ்கோத்து... டெலிகிராம் மோசடி கும்பலிடம் 25 லட்ச ரூபாயை பறிகொடுத்த நபர்.... சைபர் கிரைமில் பரபரப்பு புகார்.!
டெலிகிராம் செயலியை பயன்படுத்தி சரியானவை சார்ந்த நபரிடம் 25 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் குரு கிராம் நகரை சேர்ந்தவர் சுபத்ரா கோஸ். இவர்தான் டெலிகிராம் கும்பலிடம் ஏமாந்து 25 லட்ச ரூபாய் இழந்து இருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இவரை telegram மூலம் ஒரு மோசடி கும்பல் தொடர்பு கொண்டிருக்கிறது. அப்போது இணையதளத்தின் மூலமாக வேலை வாங்கி தருவதாக கூறி இருக்கிறது அந்த கும்பல்.
இதனை நம்பி அவர்களின் அழைப்பை ஏற்று இருக்கிறார் சுபத்ரா கோஸ். அப்போது பத்தாயிரம் ரூபாய் செலுத்தினால் சிறு சிறு வேலைகளை தருகிறோம் அந்த வேலைகளை செய்து முடித்தால் 18,000 திரும்ப கிடைக்கும் என கூறி இருக்கிறது. இதனை நம்பி பத்தாயிரம் ரூபாயை அவர்கள் சொன்ன வாங்கி கணக்கிற்கு அனுப்பி இருக்கிறார் கோஸ.. அப்போது அவர்கள் சிறு சிறு பணிகளை கொடுத்து சில நட்சத்திர ஹோட்டல்களின் இணைப்புகளை அனுப்பி அவற்றிற்கு ரேட்டிங் குடுக்க சொல்லி இருக்கிறார்கள் . அந்த வேலையை இவர் முடித்ததும் 18 ஆயிரம் ரூபாய் வருது வங்கி கணக்கிற்கு வந்திருக்கிறது . இந்த நம்பிக்கையில் சுபத்ரா கோஸ் அதிக லாபம் கிடைக்கும் என நம்பி 25,29,176 ரூபாயை முதலீடு செய்துள்ளார். ஆனால் அந்த கும்பல் இவரது கணக்கை முடக்கிவிட்டது. மேலும் 12 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்த தவறினால் அவருடைய வங்கி கணக்கு ஹேக் செய்யப்படும் எனவும் மிரட்டல் கொடுத்திருக்கிறது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சுபத்ரா கோஸ் இது தொடர்பாக சைபர் கிரைம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார் இவரது தகவலின் பெயரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மோசடி கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆன்லைன் மோசடி பற்றி எவ்வளவு தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பேராசையின் காரணமாக அவர்கள் விரிக்கும் வழியில் மக்கள் விழுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது.