பகீர்... 81,000 திருமணமான ஆண்கள் தற்கொலை... தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க பொதுநல வழக்கு... நீதிபதிகள் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.!



a-public-interest-case-in-the-supreme-court-demanding-t

‌குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் ஆண்களுக்கு தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.

இது தொடர்பான பொது நல வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நபர்  தனது மனதில் பெண்களின் துயர் துடைப்பதற்கு தேசிய மகளிர் ஆணையம் இருப்பது போல ஆண்களின் கஷ்டங்களையும் தெரிவிப்பதற்கு தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது ஆண்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

India

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான சூரியகாந்த் மற்றும்  தீபா அண்ணன் தத்தாகியோரின் முன் விசாரணைக்கு வந்தது . மனுதாரர் சார்பாக வாதாடிய  வழக்கறிஞர்  மகேஷ் குமார் திவாரி 2021 ஆம் ஆண்டிலிருந்து  குடும்ப வன்முறையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை 81,063  ஆக இருக்கிறது என குற்ற ஆவன அறிக்கை  தெரிவிப்பதாக நீதிபதிகளின் பார்வைக்கு கொண்டு வந்தார்.

India

எனவே குடும்ப வன்முறையால் ஆண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க தேசிய ஆடவர் ஆணையம் அமைக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள்  தவறை ஒரு தரப்பிற்கு எதிராக சித்தரிக்காதீர்கள் என்று கூறி  பொதுநல வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.