ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஓடும் ரயிலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்.. காரணம் என்ன.? போலிஸார் விசாரணை.!
அசாம் கவுகாத்தியிலிருந்து பெங்களூரு செல்லும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் சென்னை சென்ட்ரல் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது இந்த இரயிலில் எஸ் 8 பெட்டியில் இருந்த ஒரு பயணி கழிவறைக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த பயணி வெளியே வராமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த சக பயணிகள் இரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காட்பாடி ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்பட்டது. அங்கு வந்த இரயில்வே காவல் துறையினர் நீண்ட நேரம் கழிவறையின் கதவை தட்டியும் உள்ளிருந்து எந்த சத்தமும் கேட்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் கதவை உடைத்து பார்த்போது வாலிபர் ஒருவர் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தது தெரிய வந்துள்ளது. இதனை பார்த்த காவல் துறையினர் மற்றும் சக பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து காவல் துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இறந்த வாலிபர் நேபாளத்தைச் சேர்ந்த சந்திரஜித் என்றும் பெங்களூரில் வீட்டு வேலை செய்து வந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும் வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இரயிலில் பயணி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.