96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நண்பனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. தீவிர விசாரணையில் போலீஸ்..!
ஹைதராபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது நண்பனை நம்பி வேலை தேடி உத்தரப்பிரதேசம் சென்றுள்ளார். அங்கு சென்ற பெண்ணை அழைத்துக் கொண்ட அவரது நண்பரான மாணிக் ஷர்மா ஒரு ஹோட்டலில் தங்க வைத்துவிட்டு மறுநாள் வந்து பார்க்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதனைதொடர்ந்து மறுநாள் மாணிக் ஷர்மா தனது நண்பர்களான துக்காராம் மற்றும் அபிஷேக் ஆகியோரை அழைத்துக் கொண்டு அந்த இளம் பெண்ணை தங்க வைத்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த இளம் பெண்ணிற்கு வேலை வாங்கி தருவதாக கூறி கூட்டு பாலில் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் வேலை வாங்கி தருவதாக கூறி நண்பனை நம்பி சென்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.