96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அச்சச்சோ... ஃபேஷன் ஷோவில் மாடல் அழகி பரிதாப பலி... காவல்துறை விசாரணையில் 4 பேர் கைது.!
நொய்டா ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற பேஷன் ஷோவின் போது இளம் மாடல் அழகி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் ஒரு நபர் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
நொய்டாவில் உள்ள பிலிம் சிட்டி பகுதியில் நேற்று பேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிக்கான அரங்கம் இரும்பு தூண்களால் அமைக்கப்பட்டிருந்தது. வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபிராஜ் ஆகிய மாடல்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் போது அரங்கத்தில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு தூண்கள் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த எதிர்பாராத விபத்தில் வன்சிகா சோப்ரா மற்றும் பாபிராஜ் ஆகிய இரு மாடல்களும் பலத்த காயத்திற்கு உள்ளாகினர் . இதனைத் தொடர்ந்து அவர்களை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த வன்சிகா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பாபிராஜ் தற்போது பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.