ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
காதலை முறித்துக் கொண்ட இளம் பெண்: நேரம் பார்த்து கழுத்தை அறுத்த காதலன்..!
கேரள மாநிலம், கன்னூர் மாவட்டம் மனந்தரி பகுதியை சேர்ந்த வாலிபர் ஷம்ஜித் (25). கன்னூர் மாவட்டம் வாழ்யாயில் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் விஷ்ணுபிரியா (21). இவர் அதே பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பில் பார்மசிஸ்ட்டாக பணிபுரிந்து வருகிறார். விஷ்ணு பிரியாவும், ஷம்ஜித்தும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன் ஷம்ஜித்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விஷ்ணுபிரியா அவருடனான காதலை முறித்துக்கொண்டுள்ளார். இதன் காரணமாக, விஷ்ணுபிரியா மீது ஷம்ஜித் ஆத்திரமடைந்துள்ளார். இந்த நிலையில், விஷ்ணுபிரியாவின் உறவினர் ஒருவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினர் அனைவரும் நேற்று உரவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். இதனால் விஷ்ணு பிரியா வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனை அறிந்த ஷம்ஜித், விஷ்ணுபிரியாவின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு வீட்டில் தனியாக இருந்த அவரிடம் காதலை முறித்துக்கொண்டது குறித்து கேட்டு ஷம்ஜித் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த ஷம்ஜித் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுபிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதன் பின்னரும் ஆத்திரம் தீராத ஷம்ஜித், விஷ்ணுபிரியாவின் உடலில் பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்த விஷ்ணுபிரியா, ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார். அவரது உடலில் மொத்தம் 18 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. விஷ்னுபிரியா உயிரிழந்ததை உறுதி செய்த பின்பு, ஷம்ஜித் அங்கிருந்து தப்பியுள்ளார்.
வெளியூர் சென்ற விஷ்ணுபிரியாவின் குடும்பத்தினர் வீடு திரும்பிய போது, அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விஷ்ணுபிரியாவின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது முன்னாள் காதல் ஷம்ஜித்தை கைது செய்தனர். விசாரணையில் விஷ்ணுபிரியாவை கொலை செய்ததை ஷம்ஜித் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.