ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இந்திய அளவில் பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்த் மகன் படைத்த சாதனை! உற்சாகத்துடன் குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பன்முக திறமைக் கொண்டு புகழ்பெற்று விளங்குபவர் நடிகர் சின்னி ஜெய்ந்த். 1980 மற்றும் 90களில் ஏராளமான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக கலக்கிய இவர் ரஜினி, கமல், பிரபு, கார்த்தி, சத்யராஜ், முரளி என முன்னணி நடிகர்களின் படங்களில் நண்பராகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
மேலும் அவர் உனக்காக மட்டும் என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் களமிறங்கினார். இவருக்கு இருமகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய். இவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
மேலும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எப்.ஸ் பதவிகளுக்கான இந்த தேர்வில், தேர்ச்சி பெற்ற 829 பேரில் இவர் இந்திய அளவில் 75வது இடம்பிடித்துள்ளார். சினிமாவில் உள்ள பல பிரபலங்களின் வாரிசுகள், தொடர்ந்து சினிமா துறையிலேயே ஈடுபட்டுவரும் நிலையில், மக்கள் சேவைக்காக களமிறங்கிய நடிகர் சின்னி ஜெயந்தின் மகனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.