53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
ஆப்பிள் நிறுவன ஐபேட் விளம்பரத்திற்கு கிளம்பிய எதிர்ப்பு.! கடுமையாக விமர்சித்த நடிகர் ஹிரித்திக் ரோஷன்
முன்னணி நிறுவனமான ஆப்பிள் தங்களது ஐபேட் மாடல்களை அப்டேட் செய்துள்ளது. இந்நிலையில் புதிய ஐபேட் ப்ரோ மாடலை விளம்பரப்படுத்த ’கிரஷ்’ என்ற பெயரில் விளம்பர வீடியோ ஒன்றை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டிருந்தது.
புதிய ஐபேட் விளம்பரம்
அந்த விளம்பரத்தில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருக்கும் விளையாட்டு இயந்திரங்கள், பியானோ, கிடார் போன்ற இசை வாத்தியங்கள், புத்தகங்கள், வண்ண பெயிண்டுகள், ஸ்பீக்கர்கள், விளக்குகள், சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை பெரிய நசுக்கும் எந்திரத்தின் கீழ் வைத்து நசுக்கப்படுகிறது. பின்னர் அவை மெலிதான புதிய ஐபேட் ப்ரோ உருவாவது போல காண்பிக்கப்பட்டுள்ளது. இது கலைத்துறையினரிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
Meet the new iPad Pro: the thinnest product we’ve ever created, the most advanced display we’ve ever produced, with the incredible power of the M4 chip. Just imagine all the things it’ll be used to create. pic.twitter.com/6PeGXNoKgG
— Tim Cook (@tim_cook) May 7, 2024
இதையும் படிங்க: உடலை குறைத்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கிரீன் ஆப்பிளின் நன்மைகள்.!
நடிகர் ஹிரித்திக் ரோஷன் விமர்சனம்
இந்த விளம்பரம் பயனுள்ள பொருட்கள், கலைகளை எந்தளவிற்கு தொழில்நுட்பம் அழிக்கிறது என்பதை காட்டுகிறது என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'ஆப்பிள் நிறுவனத்தின் இந்த புதிய விளம்பரம் மிகவும் சோகமானதாகவும், அறியாமையில் உருவாக்கப்பட்டதாகவும் உள்ளது' என விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: "பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் pbc ஜூஸ்!" எப்பிடி செய்யணும் தெரியுமா.?