மாண்டுபோன மனிதம்? அவசரமாக சென்ற ஆம்புலன்ஸை மறித்து ஓட்டுனரை தாக்கிய குடிகார இளைஞன்; ஓவர்டேக் செய்து வந்ததால் அதிர்ச்சி செயல்.!



Ambulance Driver Beaten by Drunken Car Driver In Bangalore 

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை சேர்ந்த 5 மாத குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவ சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சிறுமி பெங்களூரில் உள்ள வாணி விலாஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். 

அப்போது, அவசர நிலை கருதி அவசர ஊர்தி வேகமாக பயணம் செய்துள்ளது. வழியில் இன்னோவா காரில் குடித்துவிட்டு போதையில் வந்த நபரின் காரை, அவசர ஊர்தி முந்திக்கொண்டு வந்துள்ளது. இந்த விஷயம் கார் ஓட்டுனருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: லைன் மேனுக்கு மின்கம்பத்தில் காத்திருந்த எமன்; உடல் கருகி நடந்த பயங்கரம்.!

மதுபோதையில் அதிர்ச்சி செயல்

இதனால் ஆவேசமடைந்த ஈவு இரக்கமில்லாத கேடுகெட்ட குடிமகன், சுமார் 6 கி.மீ தூரம் அவசர ஊர்தியை துரத்தி வந்து, கூட்ட நெரிசல் கொண்ட இடத்தில் பிடித்து இருக்கிறார். அங்கு அவசர ஊர்தி ஓட்டுனரை கண்டித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

உயிருக்கு போராடும் குழந்தை

சம்பவ இடத்தில் வேறொரு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர், இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தி அவசர ஊர்தியை மேற்படி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறது.

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்

இளைஞர் அவசர ஊர்தி ஓட்டுனரை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

மதுபோதை ஆசாமிகளால் விபத்துகள் ஒருபுறம் ஏற்பட, மறுபுறம் தனது வாகனத்தை ஏன் முந்திச்சென்றாய்? என விரட்டி வந்து தாக்குதல் நடத்தியது நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய நபரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இதையும் படிங்க: #Breaking: மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பு: வாழ்த்து தெரிவித்த பாக்., பிரதமருக்கு பதில் கொடுத்த பிரதமர் மோடி..!