மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
லைன் மேனுக்கு மின்கம்பத்தில் காத்திருந்த எமன்; உடல் கருகி நடந்த பயங்கரம்.!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கெக்கரி மாவட்டம், மசோதா பகுதியில் பந்தன்வாடா சுங்கச்சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடிக்கு அருகே மசோதா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் லைன்மேன் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்துகொண்டு இருந்தார். அச்சமயம் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
மின்தாக்குதலில் சோகம்:
அலட்சியமாக மின்கம்பத்தில் ஏறிய நபர், திடீரென மின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார். இதனால் அவர் உடலின் மீது மின்சாரம் பாய்ந்து கருகி இருக்கிறது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் காவல் துறையினர் மற்றும் மின்சார துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத மின்வேலியில் சிக்கி பாஜக புள்ளியின் உறவினர் மரணம்; கண்ணீரில் குடும்பத்தினர்.!
அதிகாரிகள் விசாரணை:
நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மின்சாரத்தை துண்டித்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "சில தேவதைகளுக்கு இறகுகள் இருப்பதில்லை, ஸ்டெதகோப் தான்" - 6 வயது சிறுவனின் உயிரை கைப்பற்றிய மருத்துவருக்கு குவியும் பாராட்டு.!