ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்த கல்லூரி மாணவர்.. ஜூஸ் கடையில் பேரதிர்ச்சி சம்பவம்..!
கல்லூரி மாணவர் கூல்ட்ரிங்க்ஸ் கடையில் ஆசிட்டை தண்ணீர் என நினைத்து குடித்த பரிதாபம் நடந்துள்ளது.
ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிருஷ்ண மாவட்டத்தில் வசித்து வருபவர் சைதன்யா (வயது 21). இவர் விஜயவாடாவில் இருக்கும் லயோலா கல்லூரியில் 3 ஆம் வருடம் படித்து வருகிறார். இந்த கல்லூரிக்கு அருகே குளிர்பான கடை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று, சைதன்யா குளிர்பான கடைக்கு சென்று தண்ணீர் கேட்டுள்ளார்.
கடையின் உரிமையாளர் பிரிட்ஜில் இருக்கும் தண்ணீரை எடுத்து குடித்துக்கொள்ளுமாறு கூறவே, அவரும் ஒரு பாட்டிலில் இருந்த நீரை எடுத்து குடித்துள்ளார். அப்போது, அவரின் வாய் மற்றும் குடல் பகுதிகள் வெந்து வலியால் அலறித்துடித்த நிலையில், அப்போதுதான் அவருக்கு ஆசிட்டை குடித்துள்ளோம் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக அவரை மீட்டவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கடையின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஆசிட்டை தண்ணீர் பாடலில் ஊற்றி எதற்காக அனைவரும் உபயோகம் செய்யும் பிரிட்ஜில் வைக்க வேண்டும்? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மாணவர்களும் போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.