96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பழிக்கு பழி.. 250 நாய்களை கட்டிடத்தின் உச்சியிலிருந்து வீசியெறிந்து கொன்ற குரங்குகள்!! வெளியான திகில் செய்தி!
பழிக்கு பழி வாங்குவதற்காக குரங்குகள் 250 நாய்களை கொலை செய்திருப்பதாக கூறப்படும் தகவல் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மனிதர்களுடன் மிகவும் நெருக்கமாக வளரக்கூடிய விலங்குகளில் ஒன்று குரங்கு. பலர் குரங்குகளை செல்லப்பிராணிகளாகவும் வளர்த்துவருகின்றனர். குரங்குகள் சேட்டை பிடித்தவை என்றாலும் கூட, அவை சாதுவான விலங்குகளாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த செய்தி குறிப்பு.
ஆம், மஹாராஷ்ட்ராவிலுள்ள Majalgaon என்ற கிராமத்தில், சில நாய்கள் ஒன்றாக சேர்ந்து குரங்கு குட்டி ஒன்றை கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு பழி வாங்கும் விதமாக, குரங்குகள் சேர்ந்து நாய்களைத் தாக்கி, அவற்றைத் தூக்கிச் சென்று உயரமான கட்டிடங்கள் மற்றும் மரங்கள் மீதிருந்து கீழே வீசி கொலை செய்வதாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர்.
இதுவரை, சுமார் 250 நாய்கள் வரை குரங்குகளால் இப்படி வீசி எறியப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனவாம். அந்த பகுதியில் தற்போது ஒரு நாய் கூட இல்லை என்று கூறும் கிராமவாசிகள், நாய்கள் இல்லாததால், குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் வழியில் குரங்குகள் அவர்களை துரத்துவதாக திகிலுடன் தெரிவித்துள்ளார்கள்.
250 நாய்களை குரங்குகள் பழிவாங்கியுள்ளதாக கூறப்படும் தகவல் பலரையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.