96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
என் மகன் இறந்தால் என்ன..? எனது 2 பேரன்களை ராணுவத்திற்கு அனுப்புவேன்..! வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை பேசிய நெகிழ்ச்சி வார்த்தைகள்..!
என் மகன் இறந்தால் என்ன? எனது 2 பேரன்களையும் ராணுவத்துக்கு அனுப்புவேன் என வீரமரணம் அடைந்த ராணுவ வீரரின் தந்தை பேசிய வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
இந்தியா - சீனா எல்லையில் இரண்டு நாட்டுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடி தாக்குதலில் சீன வீரர்கள் 40 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
#WATCH Bihar: Father of Sepoy Kundan Kumar, who lost his life in #GalwanValley of Ladakh on June 15-16, says, "My son sacrificed his life for the nation. I have two grandsons, I will send them too." pic.twitter.com/WHkkJw0HEX
— ANI (@ANI) June 17, 2020
இந்நிலையில் நாட்டுக்கா வீரமரணமடைந்த 20 வீரர்களில் ஒருவர் பீகாரை சேர்ந்த குந்தன் குமார். மகன் உயிரிழந்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டநிலையில் உயிரிழந்த ராணுவ வீரர் குந்தன் குமாரின் தந்தை செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது அவர் கூறிய வார்த்தைகள் அனைவரையும் கண்கலங்க வைத்தது.
எனது மகன் தன் தாய் நாட்டிற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டான். அவன் இறந்தால் என்ன? எனக்கு இரண்டு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களையும் நான் ராணுவத்திற்கு அனுப்புவேன் என கூறியுள்ளார்.