96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
பகீர்.. தொடர்ந்து அழுது கொண்டே இருந்த பேரன்.. ஆத்திரத்தில் பேரனையும் மருமகளையும் கொன்று குவித்த தாத்தா.. பரபரப்பு சம்பவம்..!
உத்திரபிரதேச மாநிலம் முடியக்கலன் கிராமத்தில் கமல்காந்த் எனும் முதியவர் ஒருவர் தனது மனைவி, மருமகள் ஷிக்கா மற்றும் பேரக்குழந்தை ஆயுஷ்வுடன் வசித்து வந்துள்ளார். கமல் காந்த் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று சொல்லப்படுகிறது. இவரது மகன் பஞ்சாப்பில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்த முதியவரின் பேரன் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த கமல்காந்த் அங்கிருந்த அரிவாளால் அவரது பேரன் ஆயுஷ் மற்றும் மருமகள் ஷிக்கா ஆகியோரை இரக்கமின்றி கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த கொடூர தாக்குதலில் இரண்டு வயது குழந்தை ஆயுஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது தாய் ஷிக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட கமல்காந்தை கைது செய்ததோடு அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.