இரண்டாவது மனைவியை நடுரோட்டில் நண்பர்களுடன் கதறி துடிக்கவிட்ட பயங்கரம்.. மகன் கண்முன்னே துயரம்.!



Bangalore Woman Archana Reddy Murder by Her Second Husband Naveen Kumar

மனைவியின் சொத்துக்களில் பங்குகேட்டு பிரச்சனை செய்த இரண்டாவது கணவர், சொந்த மனைவியை துடிதுடிக்க வெட்டிக்கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், ஆனேக்கல் ஜிகினி பகுதியை சார்ந்தவர் அர்ச்சனா ரெட்டி (வயது 40). இவருக்கு திருமணம் முடிந்து கணவர், மகன் இருக்கிறார். கடந்த 8 வருடத்திற்கு முன்னதாக கருத்து வேறுபாட்டினால் பிரிந்த தம்பதி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அர்ச்சனா ரெட்டிக்கும் - நவீன் குமார் என்பவருக்கும் இடையே 5 வருடங்களுக்கு முன்னர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் திருமணம் செய்துள்ளனர். 

இந்த சூழலில், ராமநகர் மாவட்டம் சன்னபட்டனா நகரில் அர்ச்சனா ரெட்டிக்கு பல சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களில் தனக்கு பாதி வேண்டும் என்று கூறி நவீன்குமார் கேட்டுள்ளார். இதற்கு அர்ச்சனா ரெட்டி மறுத்துவிடவே, இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு நடந்து வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக அர்ச்சனா ரெட்டி நவீன்குமாரை பிரிந்த நிலையில், மகனுடன் பெல்லாந்தூரில் வசித்து வந்துள்ளார். 

அங்கும் சென்று நவீன் குமார் அர்ச்சனா ரெட்டியிடம் தகராறு செய்து வந்த நிலையில், நேற்று முன்தினம் ஜிகினியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்களிக்க அர்ச்சனா ரெட்டி சென்று இருக்கிறீர். காரை ஓட்டுநர் பிரமோத் என்பவர் ஒட்டிய நிலையில், காரில் அர்ச்சனா ரெட்டியின் மகனும் இருந்துள்ளார். இவர்களின் கார் எலக்ட்ரானிக் சிட்டி ஒசரோடு பகுதியில் வருகையில், நவீன் குமார் தனது நண்பர்களுடன் அர்ச்சனா ரெட்டி காரை மறித்துள்ளார்.

bangalore

காரில் இருந்த அர்ச்சனா ரெட்டியை அவர்கள் பிடித்து வெளியே இழுக்க, அவர் தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதன்போது, நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அர்ச்சனா ரெட்டியை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இதில், சம்பவ இடத்திலேயே அர்ச்சனா ரெட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த எலக்ட்ரானிக் சிட்டி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அர்ச்சனா ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சொத்து தகராறில் நவீன் குமார் அர்ச்சனா ரெட்டியை கொலை செய்தது அம்பலமானது. நவீன் குமார் மற்றும் அவரது நண்பர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.