96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
#ShockingVideo: பியூட்டி பார்லரில் நடந்த பயங்கரம்.. சுவிட்ச் போட்டதும் பரவிய.தீ.. மக்களே உஷார்.!
சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பியூட்டி பார்லரில் வாடிக்கையாளருக்கு சிகைத்திருத்தம் செய்யும் பணியாளர் தனது பணியை செய்கிறார். அப்போது, அவர் ஹீட்டரை உபயோகம் செய்த நேரத்தில், பார்லர் முழுவதும் தீப்பிடித்து எரிகிறது.
இதனால் கரும்புகை சூழ்ந்துகொள்ளவே, பதறிப்போன இருவரும் அங்கிருந்து அலறியபடி வெளியேறுகின்றனர். இந்த தீ எதனால் பற்றியது என்பது தொடர்பான உறுதியான விளக்கம் இல்லை. ஆனால், வாடிக்கையாளருக்கு தலையில் உபயோகம் செய்த கிரீமின் மூலம் தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரியவருகிறது.
பெட்ரோலை போல எரியும் தன்மை கொண்ட அந்த கிரீம், சிறிதளவு வெப்பக்காற்று பட்டதும் அறையினை மொத்தமாக தீக்கு இரையாக்கியுள்ளது என்று கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது. மேலும், பணியிடத்தில் உள்ள மெஷின்களை சோதனை செய்து உபயோகம் செய்ய வேண்டும் என்றும் பலரும் அறிவுறுத்துகின்றனர்.
இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பான விஷயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.